Search
Close this search box.
யாழ் இந்துக் கல்லூரி மாணவனின் சாதனை

யாழ் இந்துக் கல்லூரியைச் (Jaffna Hindu College) சேர்ந்த மாணவன் துஸ்யந்தன் பிரசாந்தன் என்பவர்  இணை பாடவிதானச் செயற்பாடுகளில் சாதித்ததன் ஊடாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இதனடிப்படையில், மூலக்கூறு உயிரியல் பாடத்திற்கு தெரிவாகியிருந்த பிரசாந்தன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேசிய மட்ட சாதனையாளர்கள் நேர்முகத்தேர்வின் பின்னர் ஊவா (Uva Province) வெல்லச மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத் தெரிவிற்காக க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பிரதான மூன்று பாடங்களிலும் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளுக்கு Z புள்ளி கணிக்கப்படுகிறது.

எனினும், மாணவர் ஒருவர் இணைப்பாட விதானத்தில் வெளிப்படுத்திய திறமைகளுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலதிக Z புள்ளிகளை வழங்கி அவர்களுக்கு மேலதிக வாய்ப்பை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 99 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகியுள்ளதோடு இருவர் விசேட வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், குறித்த பாடசாலையின் க.பொ.த உயர்தரம் 2022 உயிரியல் பிரிவு மாணவனுக்கு மருத்துவ பீடம் (ஊவா வெல்லச பல்கலைக் கழகம்) செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும், நேர்முகத்தேர்வில் உயர்தரக் காலப்பகுதியில் பெற்ற அடைவுகள் பிரதானமாக கொள்ளப்பட்டாலும் பாடசாலைக் கால அடைவுகள் அனைத்தும் கருத்திற்கொண்டு நோக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News