Search
Close this search box.
கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம்?

ஜனாதிபதியின் பதவி காலத்தை நீடிப்பதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring

More News