Search
Close this search box.
தமிழில் கொண்டாடப்பட்ட வெசாக் தினம்…

தமிழ் பக்திப் பாடல்கள் மற்றும் பௌத்த வரலாற்றுக் கதைகளுடன் முல்லைத்தீவில் வெசாக்தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவு கூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பௌத்தர்கள் விளக்குகளை ஒளிரவிட்டு, வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, மிகுந்த பக்தியுடன் இதனை வருடம் தோறும் மே மாதம் 23 திகதி கொண்டாடி வருகின்றனர்.

மேற்படி வெசாக்தினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 59ஆவது காலல் படையினரின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் புத்த பெருமானின் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் வரலாற்றுக் கதைகளும் தமிழ் பக்தி பாடல்களும் ஒலிபரப்பப்பட்டிருந்தன.

குறித்த வெசாக் கொண்டாட்டத்தில் மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் கடந்து சிறுவர்கள், பெரியோர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வெசாக் தினத்தினை கொண்டாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News