Search
Close this search box.
வட்டவளையில் முறிந்து வீழ்ந்த மரம்: மலையக மார்க்கத்திலான போக்குவரத்து பாதிப்பு..

வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் ஹட்டன் – கண்டி பிரதான வீதியூடான போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (23) பகல் இடம்பெற்றுள்ளது.

ஹட்டனிலிருந்து கினிகத்தேனை வழியூடாக கண்டி, கொழும்பிற்கு பயணிக்கும் வாகனங்களும் கண்டியிலிருந்து ஹட்டனிற்கு செல்லும் வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பலத்த மழையுடனான சீரற்ற வானிலைக்கு மத்தியில் பயணிகள் மாற்றும் வாகனங்கள் நீண்ட நேரமாக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் உதவியுடன் வட்டவளை பொலிஸார் மரத்தின் கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Sharing is caring

More News