Search
Close this search box.
வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சீனா அரசாங்கத்தினால் உதவிப் பொருட்கள்…!

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய சீனா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள 1500 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிப் பொருட்கள் உரியவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று(23) நடைபெற்றது.

சூம் தொழினுட்பத்தினூடாக  இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் திணைக்கள மாவட்ட பணிப்பாளர்களுக்கான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய சீன அரசாங்கத்தினால்  500 மில்லின் பெறுமதியிலான மீன்பிடி வலைகள், 500 மில்லியன் பெறுமதியிலான வீட்டுத் திட்டம், 500 மில்லியன் பெறுமதியிலான அரிசி போன்றவை அனுப்பி வைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News