விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசாக தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதற்காக 18,000இற்கும் அதிகமான பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்களும் 321 விசாக தோரணைகளும் அமைக்கப்பட்டுள்ளன.