வெவாக் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை, மஹர சிறைச்சாலைகள் உள்ளிட்ட நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளில் பத்து பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை அவர்கள் உறவினர்கள் தடுப்புக் கூண்டுக்கு வௌியே பார்வையிடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.