Search
Close this search box.
சம்பள உயர்வை உறுதிப்படுத்தி அதி விசேட வர்த்தமானி…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700 ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தொழில் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே 01ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற  இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அறிவித்திருந்தார்.

பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 350 ரூபா என்ற வகையில் நாளாந்தம் 1700 ரூபா சம்பளத்தை அதிகரிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டிருந்தது.

பின்னர் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கான காலவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை உறுதிப்படுத்தி தற்போது அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வௌியிடப்பட்டுள்ளது.

Sharing is caring

More News