அதிபர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் (colombo) உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் ஒன்றை செய்து ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்தார்.
ஈரான் தூதரகத்திற்கு இன்று (22.5.202) காலை வருகை தந்த ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலி ரெசா டெல்கோஷ் மற்றும் பணிப்பாளர்ககள் வரவேற்றனர்.
அதன் பின்னர், ரணில் விக்ரமசிங்க ஈரான்(iran) தூதுவருடன் ஒரு குறுகிய உரையாடலில் ஈடுபட்டார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில் ஒரு குறிப்பை வைத்த, சிறிலங்கா அதிபர் ‘ஈரான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆம் திகதி ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்தார். ஈரான் அதிபரின் மறைவை தொடர்ந்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.