Search
Close this search box.
ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ள அமைச்சர் அலி சப்ரி…

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான்   ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) இறுதிச் சடங்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொள்ளவுள்ளார்.

ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் இந்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய மக்கள் இந்நாட்டிலுள்ள ஈரான் தூதரகத்தில் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

அதேவேளை, ஈரானிய ஜனாதிபதி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கான இறுதி ஊர்வலம் வடமேற்கு ஈரானில்  ஆரம்பமாகியது.

மேலும், ஈரானில் 5 நாட்களுக்கு துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

Sharing is caring

More News