தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல- வெல்லவாய வீதி இன்று (17) காலை போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடும் மழை காரணமாக குறித்த வீதி நேற்றையதினம் (16) பிற்பகல் தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல- வெல்லவாய வீதி, இன்று காலை 6 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எல்ல கரந்தகொல்ல மலிதகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அவ்விடத்தின் இருபுறமும் பொலிஸ் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் மட்டுமே சாரதிகள் அவ்விடத்தை கடந்து செல்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.