இந்திய கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் – கோடியக்கரைப் பகுதியில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் குறித்த மீனவர்களின் படகுகளையும் இந்திய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த இலங்கை மீனவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை யாழ்ப்பாணம் – மாதகல் புளியந்தரை கடற்கரை பகுதியில் படகுடன் மூன்று இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
படகில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டமையில் அவர்கள் புளியந்தரை கடற்கரையை அடைந்தனரா? என்பது தொடர்பில் அவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் அவர்கள் மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.