Search
Close this search box.
O/L மாணவர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு!

இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஜூன் மாதம் 4 ஆம் திகதி உயர்தர வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன.

இது தொடர்பான சுற்றறிக்கை மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் கிடைக்காத அதிபர்கள் தேவையான தகவல்களை அந்தந்த மாகாண மற்றும் பிரதேச அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக தகவல் தேவைப்படும் மாணவர்கள் அவர்களுடைய பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டு அறிந்து கொள்ளலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Sharing is caring

More News