Search
Close this search box.
இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை!

ஹோகந்தர ஹொரஹேன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (15) இரவு 7.30 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நபர் ஒருவர் தடியால் தாக்கியதில், அதுருகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹோகந்தர, ஹொரஹேன வீதியில் வசிக்கும் 26 வயதுடைய திருமணமான இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்கிய நபரும் இன்று (16) காலை அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய நபர், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டு 10 நாட்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டவர் என அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் நண்பர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

நுகேகொட குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இன்று காலை சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தினர்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Sharing is caring

More News