முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இலங்கை அரசாங்கம் தடுக்கக்கூடாது என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தில் மக்கள் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் மக்கள் இறந்தனர். கஞ்சிக்காக வரிசையில் நின்ற வயோதிபர்கள், குழந்தைகள் கொல்லப்பட்டார்கள்.
இவ்வாறாக மோசமாக கொல்லப்பட்ட உறவுகளை நினைவேந்துவதற்கு அரசாங்கம் தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இறுதி காலங்களில் அந்த மக்கள் எவ்வாறான நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தார்கள் என்பதை வருங்கால தலைமுறை அறிந்து கொள்வதற்காக இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மூதூரில் கஞ்சி வழங்கிய பெண்களை பொலிஸார் மோசமாக கைது செய்தனர். இது ஒரு அசிங்கமான விடயம். இனிமேல் இவ்வாறான விடயம் நடைபெற கூடாது. ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.