Search
Close this search box.
கோர விபத்தில் சிக்கி இளைஞன் பரிதாப மரணம்..! ஆசிரியை கைது..

களுத்துறை – பாணந்துறையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின் பெண் ஆசிரியை ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை நிவ்டாவ சந்தியில் வசித்து வந்த அவித்யா ரசிது பெர்னாண்டோ என்ற 18 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை ஹொரண வீதியில் பின்கொட்டுவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பண்டாரகவில் இருந்து பாணந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார சைக்கிள் ஓட்டுநரான இளைஞன் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Sharing is caring

More News