Search
Close this search box.
வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்களால் வாள்வெட்டு – தந்தை மற்றும் மகனுக்கு ஏற்பட்ட துயரம்..!

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் வீட்டிலிருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வாள் வெட்டுத்தாக்குதலுக்கு 44 வயதுடைய தந்தையும்,  22 வயதுடைய மகனும் படுகாயமடைந்துள்ளதாகவும்,

மகன் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையிலும், தந்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

முன் கோபத்தினால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Sharing is caring

More News