நாட்டின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியினால் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி பொது வேட்பாளராக போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டால் அது குறித்து சிந்திக்கலாம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த கோரிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.