Search
Close this search box.
வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவச்சாவடி அகற்றம்!!

கொரோனா காலப்பகுதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச்சாவடி நேற்றய தினம் அகற்றப்பட்டது.

கடந்தகாலங்களில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில் வவுனியாமாவட்டத்தின் ஓமந்தை உட்படபல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

அவற்றில் பல சாவடிகள் அகற்றப்பட்டநிலையில் ஓமந்தை சோதனை சாவடி மாத்திரம் நான்குவருடங்களாக அகற்றப்படாமல் இருந்தது இந்நிலையில் நேற்றயதினம் அது அகற்றப்பட்டது.

Sharing is caring

More News