ஜனாதிபதியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்!
அதிபர், ஆசிரியர் சங்கத்தின் சம்பள முரண்பாட்டினைத் தீர்க்காது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனவாத ரீதியிலான பிரச்சனைகள் முன்னெடுப்பதனை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் தெரிவித்தார். நேற்று (09) யாழ்ப்பணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை சுட்டிக் காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் ராஜபக்ஸ அரசாங்கம் ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தினை முடக்கியதாக குறிப்பிட்டார். மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்களை பாதுகாத்துக் கொண்டு அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை தீர்ப்பதற்கு முன்வரவில்லை. ரணில் விக்கிரமசிங்க எமது போராட்டம் தொடர்பாக தமிழ் பாடசாலைகளில் எவ்வித போராட்டமும் இடம்பெறவில்லை இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து நமது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
பல ரயில் சேவைகள் ரத்து..
பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (09) நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பல அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் போராட்டம் சட்டவிரோதமானது, இதன் காரணமாக பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
துப்பாக்கிச் சூட்டில் 63 வயது நபர் பலி!
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேல்ல, ரக்வான வீதியில் உள்ள கொலோன்னா பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேயிலைத் தோட்ட உரிமையாளரான 63 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு
இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டை சூழவுள்ள சில கடற்பரப்புகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். மேலும் சப்ரகமுவ, மேல்,ஊவா, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,அம்பாறை ,மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.