Search
Close this search box.

13 வயது தேரருக்கு 22 வயது தேரரால் நேர்ந்த அவலம் – விகாரையில் நடந்த கொடூரம்

அநுராதபுரம் பிரதேசத்தில் 13 வயது தேரரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் அநுராதபுரம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 16 ஆம் திகதி இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் நகரத்தில் உள்ள விகாரையொன்றில் வசித்து வந்த 22 வயதுடைய தேரரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான தேரர் அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு விகாரையொன்றில் பணிபுரிந்து வரும் நிலையில், தனிப்பட்ட தேவை காரணமாக முன்னர் பணிபுரிந்த விகாரைக்குச் சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான தேரர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட தேரர் அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தீவிரப்படுத்தப்படும் விசேட பாதுகாப்பு திட்டங்கள்..!

இவ்வருட பொசன் பண்டிகைக்காக சமய மற்றும் கலாசார நிகழ்வுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி பொசன் பண்டிகை நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதிலும் சுமார் ஆறாயிரம் பொசோன் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான நிகழ்வுகள் மேல் மாகாணத்தில் உள்ள விகாரைகளில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பொலிஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென சுமார் 19062 பொலிஸ் உத்தியோகத்தாகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 370 பேரும், முப்படையைச் சேர்ந்த 607 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பொலிஸ் நிலைய மட்டத்தில் விசேட போக்குவரத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும், இரவு பகலாக நடமாடும் மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துகள் மூலம் பிரதேச பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

வவுனியாவில் (Vavuniya) திடீர் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று (18.6.2024) இரவு 10.55 முதல் 11.10 மணி வரை பதிவானதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மதவாச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பல்லகெலே, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய நிலநடுக்க மையங்களில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நில அதிர்வு வவுனியா மக்களாலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.