புலம்பெயர் தமிழர்களுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு: பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஸ்டேட்டன் தீவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் குறித்த அவர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக ஸ்டேட்டன் தீவில் உள்ள தமிழ் சமூகத்தைச் சந்திப்பதைப் பாராட்டுவதாகத் தூதர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு மதிப்புமிக்க முன்னோக்கிய பரிமாற்றம், தொடர்ச்சியான கலந்துரையாடல் மற்றும் பரஸ்பர புரிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது,” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்டேட்டன் தீவில் உள்ள இலங்கை கலை மற்றும் கலாச்சார அருங்காட்சியகத்தையும் தூதுவர் பார்வையிட்டார். இது அமெரிக்காவில் உள்ள தீவு தேசத்தின் வரலாறு மற்றும் படைப்பாற்றல் கலைகளுக்கு அழகான மரியாதை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு அப்பால் வெளிநாட்டில் இருக்கும் முதல் இலங்கை கலை மற்றும் கலாச்சார அருங்காட்சியகம் இதுவாகும். மேலும், இதன்போது வழங்கப்பட்ட விருந்தோம்பலுக்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நன்றி தெரிவித்துள்ளார்.
18 முதல் 20ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை! கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி அனுராதபுரம் உயர்தரப் பாடசாலை, ஸ்வர்ணபாலி தேசிய பாடசாலை, வலிசிங்க ஹரிச்சந்திர உயர் பாடசாலை, நிவட்டகச்சேதிய தேசிய பாடசாலை, ஸாஹிரா தேசிய உயர் பாடசாலை, தேவனம்பியதிஸ்ஸ புர உயர் பாடசாலை, மகாபோதி உயர் பாடசாலை, மிஹிந்தலை உயர் பாடசாலை, மிஹிந்தலை கம்மலக்குளம கல்லூரி மற்றும் தந்திரிமலை ஆகிய கல்லூரிகள் மூடப்படவுள்ளன. விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அந்த பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் அநுராதபுரம் தேசிய பொசன் விழா குழுவினர் மற்றும் அனுராதபுர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவாபத்திரன ஆகியோர் வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய பாடசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது,
உலகளவில் முதல் மூன்று இடங்களுக்குள் இலங்கை!
உலகில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் இலங்கையும் இணைந்துள்ளது. ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வௌியிட்ட அண்மைய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு கோடை காலத்தில் பயணம் செய்ய உலகின் சிறந்த மூன்று நாடுகளாக இலங்கை, கிரீஸ் மற்றும் மொரீஷியஸ் ஆகியவை பெயரிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் முதல் காலாண்டில், சுமார் 285 மில்லியன் மக்கள் சர்வதேச அளவில் சுற்றுலா சென்றுள்ளனர், இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும். அடுத்த சில மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் சர்வதேச அளவில் சுற்றுலா செல்ல உள்ளனர், மேலும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மட்டும் 24 மில்லியன் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிடுகிறது. இந்த கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் ஃபோர்ப்ஸ் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை, கிரீஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளை பயணத்திற்கு ஏற்ற இடங்களாக அறிமுகப்படுத்த முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் சஞ்சிகை, இலங்கை பசுமையான மேட்டு நிலங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் கொண்ட ஒரு தீவு என்றும், பாலியைப் போலவே சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் உள்ளது என்று சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு சொகுசு நிலை வசதிகள் உள்ளன எனவும் இயற்கையின் அழகை அனுபவிக்க 22 தேசிய பூங்காக்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைக்கால நிகழ்வுகளில் இருந்து மீண்டு, இந்த வருடத்தில் பார்வையிட சிறந்த இடங்களில் இலங்கை முன்னணியில் இருப்பதாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் மீட்பு!
மூன்று பிரதேசங்களில் அடையாளம் தெரியாத 03 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீர்கொழும்பு மற்றும் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று குறித்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு மார்ஸ்டெல்லா பாடசாலைக்கு முன்பாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக 119க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இறந்தவர் சுமார் 65 வயதுடையவர் என்றும், இறுதியாக பனியன் மற்றும்நீல நிற சதுரங்கள் கொண்ட சாரம் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, நீர்கொழும்பு சிறிகுரச தேவாலயத்திற்கு பின்னால் இனந்தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக 119 இன் கீழ் தகவல் கிடைத்தது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறந்தவரின் முதுகு மற்றும் தோள்களில் பச்சை குத்திய அடையாளங்கள் இருந்ததாகவும், இறுதியாக நீண்ட கை சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரங்கொன் விகாரையினுள் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் 60 முதல் 65 வயதுடையவர் எனவும் 05 அடி 01 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சிவப்பு நிற மேலாடையும், நீலம் மற்றும் பிரவுன் நிற பாவாடையும் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
95 இலட்சம் வாக்குகளால் ரணில் வெற்றி பெறுவார்..! தேசிய செயலாளராக பதவியேற்ற ரவி கருத்து
ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் சக்தி வாய்ந்த கூட்டணி இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளராக பதவியேற்ற முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற, தேசிய மற்றும் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க சுமார் 95 இலட்சம் வாக்குகளைப் பெறுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதான கட்சியின் செயற்குழுவில் கட்சியின் தேசிய செயலாளராக என்னை நியமித்தார். புத்துயிர் பெற்று நாட்டு மக்களின் நலனுக்காக ஐக்கிய தேசியக் கட்சியை எழுப்ப வேண்டும். பொருளாதார மாற்ற சட்டமூலத்தை முன்வைத்ததன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான முதல் படியை ஜனாதிபதி எடுத்துள்ளார். இந்த சட்டமூலம் நாட்டு மக்களுக்கு சாதகமான சட்டமூலம் என்றே கூற வேண்டும். இதன் மூலம் கடனின் அளவும் வாழ்க்கைச் செலவும் மட்டுப்படுத்தப்படும். எதிர்க்கட்சிகள் செய்வது ஜனாதிபதியை விமர்சித்து பலிகடாக்களை உருவாக்குவதுதான். எனினும் நாட்டைக் கட்டியெழுப்பும் விடயங்கள் தொடர்பான விவாதங்களுக்கு அவர்கள் தயாராக இல்லை. வாதங்களைத் தவிர்த்தல். விவாதத்திற்கு வர பயப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறோம். விவாதங்களுக்கு பயந்து ஒளிந்து கொள்வது ஏன்? அவர் திறமையற்றவர் என்பதால் விவாதத்தில் இருந்து ஓடிவிட்டார். இந்த விவாதத்திற்கு ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்பட வேண்டும் என்று நான் கூறுகின்றேன். பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது என்று கூறுவது பொய். நாட்டை திவால் நிலையில் இருந்து காப்பாற்றும் திறன் எங்களிடம் உள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்று கூடி ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை முன்வைப்போம். ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து வாக்குகளும் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 95 இலட்சம் வாக்குகளைப் பெறும் திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது.
இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு: அரசாங்கம் வெளியிட்ட தகவல்
இந்த வருடத்தில் ஸ்ரீலங்கா சுமார் 6,000 தொழிலாளர்களை ஜப்பானுக்கு (Japan) அனுப்பவுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. பராமரிப்பாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் துறைக்கான தொழிலாளர்களையே ஜப்பானுக்கு அனுப்புவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவின் (Manusha Nanayakkara) பேச்சாளர் சஞ்சய நல்லபெரும தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 3,223 தொழிலாளர்கள் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 4,518 தொழிலாளர்கள் 2023 இல் 5,647 தொழிலாளர்கள் அனுப்பப்பட்டனர். அத்துடன் 2022 இல் 4,518 தொழிலாளர்கள் அனுப்பப்பட்டதாக நல்லபெரும கூறியுள்ளார். ஜப்பானில் திறமையான தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கிடைப்பதாக தெரிவித்த அவர், திறமையான தொழிலாளிக்கு ஸ்ரீலங்கா பெறுமதியில் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதேவேளை உற்பத்தி, மீன்பிடி மற்றும் கட்டுமானத் தொழில்களில் இந்த ஆண்டு 10,000 தொழிலாளர்களை தென் கொரியாவுக்கு அனுப்பவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் நல்லபெரும தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரிப்பு..!
வெள்ள நீர் வடிந்து வருவதால், ஈக்களின் பெருக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் காணப்படும் சாதகமான சூழ்நிலை ஈ முட்டைகள் முதிர்ச்சியடைவதை துரிதப்படுத்துவதுடன், வெள்ள நீர் குறையும்போது ஈக்கள் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. புதிதாக குஞ்சு பொரித்த இந்த ஈக்கள், உணவு ஆதாரங்களைத் தேடி, அடிக்கடி மலம், குப்பைகள் மற்றும் அசுத்தமான பரப்புகளை நோக்கி ஈர்த்து, சுகாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துகின்றன என வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ஈக்களின் எழுச்சியின் விளைவுகள் பயங்கரமானவை என்பதுடன், வயிற்றுப்போக்கு நோய்கள் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு காரணமான பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உள்ளிட்ட நோய்க்கிருமிகளை ஈக்கள் காவி கொண்டு வருகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மக்களின் கணினி அறிவாற்றல் தொடர்பில் வெளியான அறிக்கை..!
இந்த நாட்டில் கணினி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு கணினி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கையில் 05 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட ஐந்தில் இருவர் கணினி அறிவு பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்தில் மூன்று பேருக்கு டிஜிட்டல் கல்வியறிவு உள்ள நிலையில், அது 63.5 சதவீதமாகும் என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது இலங்கையில் 20.2 வீதமான குடும்பங்கள் டெஸ்க்டாப் அல்லது மடிக்கணினிகளைப் பயன்படுத்துகின்ற நிலையில், நகர்ப்புற மக்களின் கணினி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டளவில், கணினி கல்வியறிவு 4.7 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், நகர்ப்புறங்களில் அதிகபட்ச கணினி கல்வியறிவு 52.9 சதவிகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல்மாகாணம் அதிக கணினி அறிவைப் பெற்றுள்ள அதேவேளை கிழக்கு மாகாணம் மிகக் குறைந்த கணினி அறிவைக் கொண்டுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வேன் – பஸ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! தடைப்பட்ட போக்குவரத்து – இன்று காலையில் பயங்கரம்
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம் பெற்றதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கினிகத்தேன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இதேவேளை பேருந்துக்கும் வேனுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, குறித்த விபத்து காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.
நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த கணவன் – இலங்கையில் கொடூர சம்பவம்
கொழும்பு – தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 31 வயதுடைய மனைவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த பெண் தனது கணவருடன் வாடகை அடிப்படையில் வீடொன்றில் வசித்து வற்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரும், அவரது நண்பர்களும் கூரிய ஆயுதத்தால் வீதியில் வைத்து பெண்ணை கொலை செய்துவிட்டு வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஹிகுரக்கொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான உயிரிழந்த பெண்ணின் கணவரும் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய மற்றைய சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.