Search
Close this search box.

சினோபெக் எரிபொருள் விலையிலும் திருத்தம்..!

இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சினோபெக் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெட்றோல் லீற்றர் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 355 ரூபாவாகும். ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 314 ரூபாவாகும். இந்நிலையில், நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிபெட்கோ எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்போது, , ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும். ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 317 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் குற்றவாளி! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….

அமெரிக்க வரலாற்றில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதல் முன்னாள் ஜனதிபதி என்ற மோசமான வரலாற்றில் டொனால்ட் டிரம்ப் இடம்பெற்றுள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனதிபதி டிரம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுகளும் உண்மை என, அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்நாட்டு வரலாற்றில் குற்றவியல் தண்டனை பெற்ற முதல் முன்னாள் அமெரிக்க ஜனதிபதி என்ற மோசமான வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். ஆனால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான பரப்புரையில் ஈடுபட எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பிற்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என நியூயார்க் நடுவர் மன்றம் அறிவித்துள்ளது. ஐந்து மாதங்களில் அமெரிக்க ஜனதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் வென்று மீண்டும் வெள்ளை மாளிகையை கைப்பற்ற டிரம்ப் தீவிரமாக களமாடி வருகிறார். இந்த சூழலில் தான், பணமோசடி வழக்கில் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இருப்பது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த வழக்கில் ஜுலை 11ம் திகதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸை அமைதிப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட பண விவரத்தை, மறைப்பதற்காக வணிகப் பதிவுகளை பொய்யாக்கிய 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு குற்றச்சாட்டிற்காகவும் அவருக்கு தலா 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படமால் என கூறப்படுகிறது. இதனிடையே, தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஒரு அப்பாவி, உண்மையான தீர்ப்பு தேர்தல் முடிவில் வாக்காளர்களிடமிருந்து வரும். நடந்து முடிந்துள்ள விசாரணை மோசமான மற்றும் அவமானகரமானது. அரசியல் எதிரியை காயப்படுத்த பைடன் நிர்வாகம் இதை செய்துள்ளது” என சாடினார். டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை ஜனதிபதி பைடன் தரப்பு வரவேற்றுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில்,”சட்டத்திற்கு மேலானவர்கள் என யாரும் இல்லை. முன்னெப்போதும் இல்லாத அளவில் நமது ஜனநாயகத்திற்கு டிரம்ப் ஆபத்தானவராக இருக்கிறார். டொனால்ட் டிரம்ப் எப்போதுமே தனது ஆதாயத்திற்காக சட்டத்தை மீறுவதால் விளைவுகளை சந்திக்க மாட்டார் என்று தவறாக நம்புகிறார். ஆனால் இன்றைய தீர்ப்பு அமெரிக்க மக்கள் ஒரு எளிய யதார்த்தத்தை எதிர்கொள்வதை மாற்றவில்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் ஜுலை 15ம் திகதி குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற உள்ளது. அதில், நவம்பர் 5ம் திகதி நடைபெற உள்ள ஜனதிபதி தேர்தலில் தற்போதைய ஜனதிபதி ஜோ பைடனுக்கு எதிரான, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் முறையாக பரிந்துரைக்கப்பட உள்ளார். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக ஜூலை 11-ம் திகதி ட்ரம்பின் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

20 நிமிடங்களில் மனிதனை கொல்லும் ஆக்டோபஸ் – மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!

20 நிமிடங்களில் மனிதனை கொல்லும்  சிறிய அளவிலான ஆக்டோபஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நாம் பார்க்க கூடிய சிறிய கடல் வாழ் உயிரினம் 26 நபர்களை கொல்லக்கூடிய கொடிய விஷத்தை தன்னிடத்தில் கொண்டுள்ளது. நீல வளையம் கொண்ட கொடிய விஷம் நிறைந்த ஆக்டோபஸ் தான் 20 நிமிடங்களில் கொல்ல கூடிய தன்மையை கொண்டுள்ளது. அதாவது, நீல வளைய ஆக்டோபஸின் உமிழ்நீர் சுரப்பியில் உள்ள சிம்பியோடிக் பாக்டீரியா டெட்ரோடோடாக்ஸின் (TTX) என்ற நச்சை உற்பத்தி செய்கிறது. இந்த நீல வளையம் கொண்ட ஆக்டோபஸ்  தன்னுடைய பாதுகாப்பிற்கு விஷத்தை பயன்படுத்தும் என்றாலும் நண்டுகள், இறால்கள் போன்ற சிறிய இரையை பிடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறது என்று அண்மையில் வீடியோ வெளியானது. குறிப்பாக இந்த டெட்ரோடோடாக்ஸின் என்ற நச்சானது மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதித்து நரம்பு தூண்டுதலை பாதிக்கிறது. இதனால், தசை சுருங்காமல் மரணத்தை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை…! சுரேன் ராகவன் தெரிவிப்பு…!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு  சிறந்த தீர்வை வழங்குவதற்கு காத்திருக்கின்றது. அதன்படி, இது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது துரதிஷ்டவசமான விடயம் எனவும் எதிர்கால சந்ததி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த தொழில்சார் நடவடிக்கைகள் காரணமாக சுமார் 150 மில்லியன் ரூபா நேரடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது 1.8 மில்லியன் மனித நேரத்தை வீணடிப்பதுடன், மேலும் ஒரு மணிநேரத்தை வீணடிக்க அரசாங்கம் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தொழிற்சங்கங்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அடுத்த ஆறு மாதங்களுக்கு 1.1 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாகவும், இந்த பிரச்சினைக்கான தீர்வை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் திறைசேரியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

குறைந்த விலையில் பழைய வாகனங்கள்; வர்த்தக மாபியாக்குழு தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை மக்களிடம் குறைந்த விலையில் பழைய வாகனங்களை பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்யும் இருநூறுக்கும் மேற்பட்ட வாகன விற்பனையாளர்கள் மற்றும் வாகன தரகர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் குறைந்த விலையில் பழைய வாகனங்களை வாங்கி மீண்டும் புதிய வானங்கள் போன்று தயார்படுத்தி விற்பனை செய்து வருகின்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த குழு வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் தகவல்களை பரப்பி, பயன்படுத்திய வாகனங்களுக்கு பெரிய சந்தையை உருவாக்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது. இந்த கடத்தல்காரர்கள் குறைந்த விலையில் பழைய வாகனங்கள் கிடைப்பதாகவும், அவற்றை சீரமைத்து புதிய வாகனங்களாக விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்த வர்த்தக மாபியா காரணமாக மக்களுக்கு சிறிய வாகனம் கூட நியாயமான விலையில் கிடைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக பலர் முறைப்பாடு செய்துள்ளனர். அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு தடை விதித்துள்ள நிலையில், சில வாகன வியாபாரிகள் புதிய மோசடியாக இதனை ஆரம்பித்துள்ளதாகவும், இந்த வர்த்தக மாபியாக்களின் நடவடிக்கை உடனடியாக முறியடிக்கப்பட வேண்டுமெனவும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கணவன் மீது வெட்டு – மனைவியை தாக்கி நகைகள் பறிப்பு! யாழில் கொள்ளைக் கும்பலின் வெறிச்செயல்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில்  கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக் கொடூர சம்பவம் இன்று அதிகாலை  இடம்பெற்றுள்ளது. உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இறைச்சிக் கோழி வியாபாரம் செய்யும் 42 வயதுடைய குணசிங்கம் சந்துரு எனும் நபரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வியாபாரம் முடித்துவிட்டு அதிகாலையில் தனது வீட்டிற்கு சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது அவரால்  அவலக்குரல் எழுப்பப்பட்ட நிலையில், அவரது மனைவி கணவரின் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே  ஓடி வந்துள்ளார். அவ்வேளை அவரது மனைவியையும் தாக்கிய கொள்ளைக் கும்பல் அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த வீட்டில் சத்தம் கேட்பதை அவதானித்த அயலவர்கள், அங்கு சென்று கூரிய ஆயுதத்தால் படுகாயமடைந்த நபரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார்  விசாரணைகளை   மேற்கொண்டு வருகின்றனர்.

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்த இரு ஆண்களின் சடலங்கள்!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், ஒருவர் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர் எனவும் மற்றையவர் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களது சடலங்கள் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம் – சாதனை படைத்த மாணவன்..!

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் யாழ் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று மாணவன் மதியழகன் டினோஜன் சாதனை படைத்துள்ளார். 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (31) வெளியாகின. இந்நிலையில், குறித்த மாணவன் கணித பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 47 ஆவது இடத்தினையும் பெற்றுள்ளார். அத்தோடு யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவனான ம. டினோஜன் பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ (3A) சித்திகளைப் பெற்றுள்ளனர். 2ஏ சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெற்றுள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். மேலும் 2ஏபி சித்திகளை 29 மாணவிகளும், 2ஏசி சித்திகளை 08 மாணவிகளும், 2ஏஎஸ் சித்தியை ஒரு மாணவியும், ஏ2பி சித்திகளை 12 மாணவிகளும், ஏபிசி சித்திகளை 16 மாணவிகளும் பெற்றுள்ளனர். சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் 19 மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர். மேலும் யாழ். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 9 மாணவிகள் 3 ஏ சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346,976 பரீட்சாத்திகள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தில் இருந்து விலகும் மொட்டுக் கட்சி..? ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நடைமுறைப்படுத்தினால் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன எச்சரித்துள்ளது. நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பாலித்த ரங்கே பண்டார தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி பொறுப்பேற்கவில்லை என்றால், நாட்டுக்கு அறிக்கை விட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஜனாதிபதியை தவிர வேறு எவரேனும் நாட்டுக்கு கேடு விளைவித்தால் அதற்கு கட்சி என்ற ரீதியில் எப்பொழுதும் எதிர்ப்பை தெரிவிப்போம், தவறு நடந்தால் அவர் நிச்சயம் அரசாங்கத்தை விட்டு விலகுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலை திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாக நடத்துவதே தமது கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷவின்  நிலைப்பாடு, இந்த நிலையில் எந்தவொரு தேர்தலையும் ஒத்திவைக்கக் கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.