பதுளை மாவட்டத்தில் அடாவத்தை, எல்ரோட், லுணுகலகம ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர் பிரிவில் எல்ரோட் தீகல எல்ல வனப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு மர மின்கம்பங்கள் எரிந்து சாய்ந்துள்ளமையினால் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.