Search
Close this search box.
ஜனாதிபதி தேர்தலில் போட்டி – அடுத்தமாதம் அறிவிப்பை வெளியிடுகின்றார் பொன்சேகா

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா ஆகஸ்ட்மாதம் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் இராணுவதளபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ஜகன்ன கிருஸ்ணகுமார்,மூலோபாய ஆலோசகர்  வெங்கடேஸ் தர்மராஜா ஆகியோரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சரத்பொன்சேகா சுயாதீன மக்கள் வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவித்துள்ள அவர்கள் அவருக்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முக்கிய பிரமுகர்களும் ஆதரவளிப்பாளர்கள் என தெரிவித்துள்ளனர்.

சிலவிடயங்கள் குறித்து இறுதிதீர்மானம் எடுக்கவேண்டியிருந்ததால் அவரது அறிவிப்பு வெளியாவது தாமதமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring

More News