இத்தாலியில் ஆற்றில் மூழ்கி இலங்கை பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் பிரிந்தா ஆற்றில் தனது நண்பர்களுடன் நீராட சென்றபோதே குறித்த இலங்கைப் பிரஜை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ரமேஷ் கணேகெடெர என்ற 23 வயதுடைய இலங்கையரே உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்த இலங்கை பிரஜையை காப்பாற்றுவதற்காக சென்ற ருமேனிய பிரஜையும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்த இலங்கை இளைஞன் உதைபந்தாட்ட வீரர் எனவும், அவரை காப்பாற்ற முற்பட்ட வேளையில் உயிரிழந்த ருமேனிய வீரர் மல்யுத்த வீரர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு இளைஞர்களின் சடலங்களை மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இலங்கையர் இத்தாலியின் பதுவாவில் வசித்து வந்தவர் என அந்நாட்டு பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.