வவுனியா வைரவர்புளியங்குளத்தை மையமாக கொண்டு ஒரு காலத்தில் இயங்கிய, 1999ம் ஆண்டுடன் நிறைவுக்கு வந்த விளையட்டு கழகம் “ஏசியன் விளையாட்டுக்கழகம்”
அப்போதைய காலகட்டத்தில் ரெலோ உறுப்பினராக இருந்த கிறிஸ்ரி குகராஜா அவர்களின் வழிநடத்தலில் இயங்கிய அந்தக்கழகம் வைரவர்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் இப்போது உள்ள மிக்சர் விற்பனை செய்யும் கடை கட்டிடத்தில் ரெலோவின் அரசியல் பிரிவு காரியாலயமும் மக்கள் சந்திப்பு காரியாலயமும் இயங்கி வந்தது அத்துடன் ஏசியன் கூல்பார் எனும் விற்பனை நிலையமும் இயங்கி வந்தது இதனை பிரதிபலிக்கும் வகையிலேயே ஏசியன் விளையாட்டுக்கழகமும் அமையப்பெற்றிருந்தது
இந்த காலகட்டத்தில் புளொட் அமைப்பிற்கும் ரெலோ அமைப்பிற்கும் இடையில் கடும் மோதல்கள் இருந்த காலம் புளொட் அமைப்பின் மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் நங்கூரம் விளையாட்டுக்கழகமாகவும் ரெலோ மாணவர் ஒன்றியத்தினர் ஏசியன் விளையாட்டுக்கழகமாகவும் பெரும்பாலும் இயங்கி வந்தனர்
இதன் போது சன்டிவி ஒளிபரப்பையும் ரெலோ அமைப்பினர் மேற்கொண்டு வந்துடன் அதற்கான ஒரு காரியாலயமாகவும் அந்த ரெலோவின் அரசியல் பிரிவு கட்டிடமே இருந்தது சன்டிவியில் பணியாற்றிய ரகுமான் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பின்னர் கொஞ்ச கொஞ்சமாக ஏசியன் கழகம் உடையத்தொடங்கியது 1999ல் குகண் அவர்களின் இறப்பிற்கு பின்னர் முற்றிலுமாக ஏசியன் கழகம் இயங்காமல் போனது
இப்படி இருக்கும் போது வைரவர்புளியங்குளத்தில் உள்ள கிராம அலுவலர் காரியாலயத்தில் 2021ம் ஆண்டில் வைரவர்புளியங்குளம் கிராமத்திற்கு அபவிருத்தி பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி விபரங்கள் பட்டியலிடப்பட்ட அறிவித்தல் பலகை ஒன்றில் ஏசியன் விளையாட்டுக்கழகத்திற்காக ரூபா 60000 நிதி பெருமதியுடைய விளையாட்டு உபகரணங்கள் வழங்க வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது குறித்த நிதியை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நிதி ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.