வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியிலிருந்து வெளியேற்றுமாறு கோரி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
நகர்த்தல் பத்திரம் ஒன்றின் ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பிரவேசிப்பதற்கும், அதன் விவகாரங்களில் தலையிடுவதற்கும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து, 5 வழக்குகளிலிருந்து அவரை 75,000 ரூபாய் பெறுமதியான தலா 5 சரீரப் பிணைகளில் நீதிமன்றம் விடுவித்தது.
எனினும் அவர் வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, குறித்த விடுதியிலிருந்தும் வெளியேற வேண்டும் என உத்தரவிடக்கோரி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நீதிமன்றை நாடியுள்ளனர்.