சிறுவன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (17) காலை அரநாயக்க பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் குழந்தையின் தாய், இரண்டு பாட்டி மற்றும் மற்றுமொரு பெண் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு வயது குழந்தையின் இரண்டு பாட்டிகளால் இந்த கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, மேலும் தாக்குதலுக்கு உதவியதற்காக குழந்தையின் தாயும் மற்ற பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் இன்று (17) மாவனல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுவன் ஒருவன் இரண்டு பெண்களால் கொடூரமாக தாக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அரநாயக்க பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் மீது ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவன் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அண்மைய நாட்களால் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சிறு குழந்தைகளை கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்யும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.