எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக பரிந்துரைப்பதற்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுஜன பெரமுன தரப்பில் கூறப்படும் தம்மிக்க பெரேராவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தாம் தீர்மானிக்கவில்லை என்றும் அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்
விக்ரமசிங்கவின் முதிர்ச்சி, சர்வதேச அனுபவம் மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் ஆகியவை, அவர் நாட்டை வழிநடத்துவதற்கு பொருத்தமானவர் என்பதற்கான முக்கிய அம்சங்கள் என்று அவர் எடுத்துரைத்துள்ளார்.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விரைவில், இது தொடர்பான கொள்கை அடிப்படையிலான தீர்மானத்தை எட்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
இதன்படி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார், அவருடன் இணைந்து உருவாக்கப்படும் புதிய கூட்டணியில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.