Search
Close this search box.
பல மில்லியன் பெறுமதியான இரத்தினக் கற்களுடன் கட்டுநாயக்காவில் சிக்கிய ஜப்பானிய தம்பதி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்  புறப்படும் முனையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட வெளிநாட்டு தம்பதி நேற்று (16)காலை பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய புறப்பாடு முனையத்தின் நுழைவாயிலில் உள்ள விமான நிலையம் மற்றும் விமான சேவைகள்  லிமிடெட் நிறுவனத்தின் மூத்த பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு தம்பதியினரின் பொதிகளை சோதனையிட்டார்.

ஜப்பானிய தம்பதிகள் என அடையாளம் காணப்பட்ட தம்பதியரின் பொதிகள் எக்ஸ்ரே ஸ்கானர்கள் மூலம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த தம்பதியினரும் இரத்தினக் கற்களும் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த மாணிக்கக் கற்கள் பல மில்லியன் ரூபாய்களுக்கு மேல் பெறுமதியானதாக இருந்தாலும், சரியான அளவு மற்றும் மதிப்பீடு ஆகியவை சுங்க அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்பு அதிகாரி கூறினார்.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

Sharing is caring

More News