Search
Close this search box.
கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்த உடன்பட்ட இலங்கையும் அமெரிக்காவும்

இலங்கையின் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும் அமெரிக்காவும் உடன்பட்டுள்ளன.

ஜூலை 12 ஆம் திகதி வோசிங்டனில் நடைபெற்ற 5வது இலங்கை-அமெரிக்கா கூட்டாண்மை உரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை இரண்டு நாடுகளும் உறுதிப்படுத்தியதாக  இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஒத்துழைப்பின்கீழ், இலங்கையின் ஹைட்ரோகிராஃபிக் மேப்பிங் திறன்கள் மற்றும் துறையில் பணியாளர்களின் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஆதரவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே இலங்கைக்கு இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்களை வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News