Search
Close this search box.
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் ஈழத் தமிழர்.

ஒலிம்பிக் (Olympic) தீபத்தை ஏந்திய முதல் இழங்கைத் தமிழர் என்ற பெருமையை பிரான்ஸில் வசித்துவரும் வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா (Tharshan Selvarajah) பெற்றுள்ளார்.

நேற்று மாலை 6.00 மணியளவில் தர்ஷன் செல்வராஜாவிடம் ஒலிம்பிக் தீபம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர் அதனை ஏந்தி சுமார் 2.5 2.5 கிலோமீற்றர் வலம் வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் பரிஸ் நகரில் கடந்த வருடம் இடம்பெற்ற பாண் தயாரிப்புப் போட்டியில் முதலிடம் பெற்றிருந்தார்.

இதனையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்கு பாண் விநியோகம் செய்யும் உரிமையையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News