தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட நால்வரை காணவில்லையென காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
முரளிகிருஷ்ணன் லக்சிக்கா (வயது 16), ராஜகுரு மிதுஷா (வயது 16), சுந்தர்ராஜ் தர்ஷினி (வயது 16), சிறுவன் ராஜகுரு கோபிசாகர் (வயது 15) ஆகியோரே காணாமற் போனவர்களாவர்.
கடந்த (14) ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என அவர்களின் பெற்றோர்களால் முறைப்பாடு ஒன்று நேற்று (15) திங்கட்கிழமை தலவாக்கலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் உட்பட மூன்று சிறுமிகளும் தமது பெற்றோருக்கு சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று காணாமல் போயுள்ளதாக பெற்றோர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.தகவல் தெரிந்தால்
அதேவேளை இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு 0764612289, 0771546724 தொடர்புகொள்ளுமாறு பெற்றோர் உதவி கோரியுள்ளனர் . இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.