Search
Close this search box.
பணிக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு

சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன விடுமுறை போராட்டத்தில் அரச ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாது கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்று தரம் அல்லாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா ஒரு தடவை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியது.

மேலும் பாராட்டு சான்றிதழ் ஒன்றையும் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Sharing is caring

More News