புத்தர் சிலை உள்ளிட்ட தெய்வ சிலைகளை உடைத்து, மதங்களை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்று (15) அம்பன்பொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் கல்கமுவ, அம்பன்பொல சமகி மாவத்தையில் வசிக்கும் 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டதை அடுத்து, தான் முன்னர் மிகுந்த இறை பக்தியுடன் இருந்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பல ஆண்டுகளாக மிகுந்த பக்தியுடன் கடவுளுக்கு சேவை செய்து வருவதாகவும் கூறினார்.
எனினும், அதனால் எனக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றும், அதன் காரணமாகவே புத்தர் சிலைகள் மற்றும் தெய்வச் சிலைகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில், கைது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.