Search
Close this search box.
யுனெஸ்கோவின் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்…!

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே (Audrey Azoulay) இலங்கைக்கு  வருகைதந்துள்ளார்.

மூன்று பேர் அடங்கிய குழுவுடன் இன்று வருகை தந்த ஒட்ரே அசோலேவை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளனர்.

இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு அவரின் வருகை அமைந்துள்ளது.

இவ்வாறு வருகை தந்த ஒட்ரே அசோலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ளார் என்றும் இன்று(16)  முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News