மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூணொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டின் அறையொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெடிவிபத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் பலத்த சத்தம் கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், இராணுவத்தினரும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.