கொழும்பு – கோட்டையில் உள்ள பழைய அரச செயலகம் ஓன்றின் அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு துறைமுக நகர நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிர்மாண நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் கிட்டத்தட்ட 06 அடிக்கு கீழே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நிர்மாணப் பணி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.