Search
Close this search box.
தாயும் மகனும் சேர்ந்து தந்தைக்கு செய்த கொடூரம்..!!விசாரணையில் தெரியவந்த உண்மைகள்..!

ஹிதோகம திவுல் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி மற்றும் மகனால் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.நேற்று முன் தினம் (09) அனுராதபுரம் ஹிதோகம திவுல் ஏரியில் சடலமொன்று முற்றாக பல துணிகளில் மூடப்பட்டு கிரானைட் கல்லுடன் கட்டப்பட்டு ஏரியில் விடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த நபரின் பிரேத பரிசோதனையில் அவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் மேற்கொண்ட தேடுதலின் போது, ​​உயிரிழந்தவர் தங்கஹகடவல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கொலை செய்யப்பட்ட நபரின் 39 வயதுடைய மனைவி மற்றும் 24 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது,

​​கடந்த 8 ஆம் திகதி காலை 9 மணி அளவில் தாய் தந்தைக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் மகனும் தலையிட்டதில், குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.கொலையின் பின்னர், சந்தேக நபரின் வீட்டிலிருந்து ஏரிக்கு சடலத்தை எடுத்துச் சென்ற முச்சக்கரவண்டியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.அன்றைய தினம் மாலை ஏரிக்கு சடலம் கொண்டு வரப்பட்டதாகவும் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிதோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Sharing is caring

More News