தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலமான தற்போது முட்டை, மீன் மற்றும் மரக்கறிகள் விலை மீண்டும் சடுதியாக உயர்ந்து வருவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது உள்ளூர் முட்டையின் மொத்த விலை ரூ.50 ஆகவும், சில்லறை விலை ரூ.55 ஆகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இடைநிலை வியாபாரிகள் முட்டையின் விலையை உயர்த்துவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, கடந்த சில நாட்களாக மிகவும் குறைந்த விலையில் இருந்த காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகவும். கடந்த சில தினங்களை விட மீன்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.