சப்ரகமுவ மாகாணத்தில் 1080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் சாமர பமுனு ஆரச்சி குறிப்பிட்டார்.
இதற்கிணங்க முதற்கட்டமாக, 425 பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிணங்க ஆரம்பப்பிரிவுக்கு 877 ஆசிரியர்களும் கனிஷ்டப்பிரிவுக்கு 159 ஆசிரியர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.