கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாளை வாட்ஸ்அப் மூலம் வெளியிட்ட பரீட்சை நிலையத்தின் பெண் மேற்பார்வையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரீட்சை இடம்பெறும் போது ஆங்கில வினாத்தாளை புகைப்படம் எடுத்து ஹசலக்க பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு அனுப்பி வைத்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதாகியுள்ளார்.
அந்த வினாத்தாளினை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக குறித்த தனியார் வகுப்பு ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.