முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக முல்லைத்தீவில் இருவேறு இடங்களில் விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
விசுவமடு ரெட்பானா சந்தி பகுதியில் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டிலும், புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மித்த பகுதியில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் ஏற்பாட்டிலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியிலும் இடம்பெற்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.