பிரான்சில் டெங்கு காய்ச்சல் பரவல் மிக தீவிரமாக பரவி வருகிறது. ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 1,700 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் வெறுமனே 131 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் பதிவாகியிருந்த நிலையில், இவ்வருடம் ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 23 ஆம் திகதி வரை 1,679 டெங்கு காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் பொது சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் பரவும் டெங்கு காய்ச்சல் போன்று பிரான்சிலும் பரவுகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் போது மிகுந்த விளிப்புணர்வுடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.