பொலன்னறுவை தேசிய கிரிக்கெட் மைதானத்தின் முதல் கட்ட திறப்பு விழா இடம்பெற்றுள்ளது.
இந்த மைதானத்தின் திறப்பு விழா நேற்று(18.07.2024) இடம்பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் “தேசிய அபிவிருத்தி பாதை” திட்டத்தின் கீழ் இந்த புதிய மைதானம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
திறமையான துடுப்பாட்ட வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாக இந்த திட்டம் அமைந்துள்ளது.
மைதானத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை கிரிக்கெட் மொத்தம் 170 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கையின் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.