இந்தியா, குஜராத் மாநிலம், சபர்கந்தா, ஆரவல்லி, மஹிசாகர், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் சண்டிபுரா எனும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இதுவரையில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் தற்சமயம் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இந்த வைரஸ் நுளம்பு, மற்றும் சில பூச்சிகளின் மூலம் பரவுவதோடு, ஃபுளூ போன்ற அறிகுறிகளோடு காய்ச்சல் மற்றும் மூளை அழற்சியை ஏற்படுத்தும்.
சுமார் 44,000க்கும் அதிகமான மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோனையில் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று ஏற்பட்டவர்களில் 4 வயது சிறுமி உட்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் அனைவருக்கும் சண்டிபுரா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.