தனது தலைவர் பதவியை கூட தியாகம் செய்து அனைத்து தெரிவுகளையும் யாப்பு விதியின் படி மூலக்கிளைகளிலிருந்து தெரிவு செய்வதில் தான் உறுதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (Sridharan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாளை மறுதினம் திருகோணமலை மாவட்டத்தில் வருகின்ற வழக்கு ஆட்சேபனைகளை இணைக்கின்ற மறுமொழிகான நாளாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காலம் தாழ்த்தாத வகையில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலான அதிபர் தேர்தலை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதையே மக்கள் விரும்புவதாக சிறீதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.