Search
Close this search box.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை – மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று (19) பிற்பகல் 1 மணிவரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாகப் புத்தளம் கடற்பரப்புகளிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மேலும் கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரை கடல் அலையின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் அவ்வாறு உயரும் அலைகள் நிலத்தை நோக்கி வரக்கூடிய நிலை ஏதும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sharing is caring

More News