Search
Close this search box.
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு

எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைவாக எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொள்ளுமாறும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட விலைகள் தொடர்பில் விசேட அவதானத்துடன் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring

More News